காங். கூட்டணி வேட்பாளர் பாஜகவுக்கு ஓட்டம்: அசாமில் தேர்தல் ரத்து ஆகுமா?

கவுகாத்தி: அசாம் மாநிலம் தாமல்பூர் தொகுதியின் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியின் வேட்பாளர் பாசுமாதரி, பாஜகவுக்கு தாவினார். கடந்த இரண்டு நாள்களாக தலைறைவாக இருந்த பாசுமாதரி, பாஜக மூத்த தலைவர் ஹிமான்தா பிஸ்வா சர்மாவைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதுகுறித்து பாசுமாதரி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘தேர்தல் செலவுக்காக போடோலாந்து கட்சி தேவையான நிதியைத் தரவில்லை. அதனால், கட்சி மாறினேன்’ என்றார்.

இதனிடையே, பாஜகவின் மிரட்டலால்தான் பாசுமாதரி தலைமறைவாகி அந்தக் கட்சியிலேயே சேர்ந்தார் என்றும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் எம்பி மணீஷ் திவாரி வலியுறுத்தி உள்ளார். மேலும், தாமல்பூர் தொகுதியின் தேர்தலை ரத்து செய்யவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Related Stories:

More
>