×

வங்காளத்தை மீண்டும் பிளவு படுத்த பாஜக முயலுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: வங்காளத்தை மீண்டும் பிளவு படுத்த பாஜக முயலுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாடினார். மேற்குவங்கத்தில் முதல் இரண்டு கட்ட சட்டசபை தேர்தல் முடிவுற்ற நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. 8 கட்ட வாக்குப்பதிவு முடிந்து வரும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இன்னமும் 6 கட்டத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கான பிரசாரத்தில் பாஜ தலைவர்களும், பிரதமர் மோடியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேபோல், 3வது முறையாக ஆட்சியை தக்கவைப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி அடிப்பட்ட காலுடன் வீல்சேரில் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் 24 வடக்கு பர்கானா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; வங்காளத்தை மீண்டும் பிளவு படுத்த பாஜக முயலுகிறது. மதத்தால், மொழியால், கலாச்சாரத்தால் வங்காளத்தை பிரிக்க சதி நடக்கிறது. மீண்டும் வங்கப் பிரிவினை நடப்பதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதற்கு வங்காளம் மக்கள் இதற்கு துணை போய் விடாதீர்கள். மேற்குவங்க மாநிலத்தில் வசிக்கும் சிறுபான்மை சமூக மக்கள் தங்கள் வாக்குகள் பிரிவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனக் கூறினார்.

Tags : Pajaka ,Bangladesh ,Mamta Banerjee , BJP seeks to divide Bengal again: Mamata Banerjee
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...