பரப்புரையை ரத்து செய்துவிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை: தொடர்ந்து 3-வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என ஓபிஎஸ் நம்பிக்கை

தேனி: தமிழகத்தில் அதிமுக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 7 மணிக்கு முடிவடைகிறது. தேர்தல் பிரசாரத்துக்கும் இன்றும், நாளை மட்டுமே எஞ்சியுள்ளதால் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தலைவர்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் வேட்பாளர்களும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அனைத்து கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு பெரியகுளம் இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதை தொடர்ந்து பெரியகுளம் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்ற அவர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழகத்தில் அதிமுக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories:

More