மத பிரிவினைகளுக்கு எதிராக கேரள மக்கள் உறுதியாக இருப்பதால் மலையாள மண்ணில் பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், வளரவே வளராது: பினராயி விஜயன்

கண்ணூர்: மத பிரிவினைகளுக்கு எதிராக கேரள மக்கள் உறுதியாக இருப்பதால் மலையாள மண்ணில் பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், வளரவே வளராது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கண்ணீர் தொகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டின் தேர்தலில் நேமம் என்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி தனது எம்.எல்.ஏ.கணக்கை தொடங்கியது என்றும், ஆனால் இந்த தேர்தலில் அதே தொகுதியில் பாரதிய ஜனதாவின் கணக்கு முடித்துவைக்கப்படும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்திட்டுள்ளார்.

மக்களுக்கு மத வெறியை ஊட்டி பிரிவினையை ஊட்ட முயன்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டங்கள் எதுவும் நிறைவேறா வில்லை என்று பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா காலூன்ற முடியாமல் போனதற்கு மக்களிடம் உள்ள மத சார்பின்னமை என்ற நிலையான உறுதிப்பாடுதான் கரணம் என்றும் கேரளா முதல்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் ஒரே தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது என்றும் அதுவும் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதாதள கூட்டணிதான் அதற்க்கு வலி ஏற்படுத்தி கொடுத்ததாகவும் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சி உள்ளே வராமல் இருப்பதற்கு இடதுசாரிகள் முன்னிலையில் நின்றிருப்பதே காரணம் என்று அவர் கூறியிருக்கிறார்.

Related Stories: