சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவாக அமித்ஷா பரப்புரை

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் குஷ்புவுக்கு ஆதரவாக மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா பரப்புரையில் ஈடுபட்டார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சி தலைவர்கள் வாக்கு சேகரித்ததுவருகின்றனர். அதேபோல் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்த்துறை அமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவாக திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று அவர் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக செயல்பட்டுவருவதாக தெரிவித்தார். இந்த இரட்டை என்ஜின் அரசு தொடர மக்கள் ஆதரவு தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories: