நாளை இரவு 7 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தம் இல்லதாவர்கள் வெளியேற வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல் !

சென்னை: தமிழகத்தில் நாளை இரவு 7 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தம் இல்லதாவர்கள் வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இதனால், இறுதிக் கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கடைசி பிரச்சார நாள் வரும் ஏப்ரல் 4ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிரச்சாரத்திற்கு கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்படுகிறது. எனவே ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யலாம். தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம்  ஆகியவை பொருத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நாளை இரவு 7 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தம் இல்லதாவர்கள் வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுறுத்தியுள்ளார்.  மேலும், தேர்தல் தொடர்பான ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது.  நாளை இரவு 7 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>