×

சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழக சட்டமன்ற சேர்தலுக்காக தமிழகம் முழுவதும்  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக கனிமொழி எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவரும் தலைவர் மற்றும் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பிரியங்கா காந்தியின் கணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் தமிழகத்தில்  அவரது தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இன்று தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய பிரியங்கா காந்தி வருவடஹ்க இருந்தது, அவருக்கும் லேசான அறிகுறிகள் இருந்ததால் அவரது பிரச்சார திட்டம் ரத்து செய்யப்பட்டது.

திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 10 நாட்களுக்கு மேலாக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார். நேற்று மாலை சென்னை திரும்பிய அவர் இன்று  கரூரில் பிரச்சாரம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவருக்கு லேசாக கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும் இதனை தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கனிமொழி வீட்டில் தனிமை படுத்தி கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் அவர் ராஜபாளையம், சங்கரன்கோவில், ஆலங்குளம் மற்றும் திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் நேற்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
சென்னை திரும்பியவருக்கு லேசாக அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து  பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி கனிமொழி வீட்டில் தனிமைப்படுத்த கொண்டுள்ளார். பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனை செல்லக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Thimpham ,Tamil Nadu , Kanimozhi, DMK, Corona Virus, Elections2021
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...