குன்னூர் ரயில் நிலையத்தில் முக கவசங்கள் அணியாமல் சுற்றுலா பயணிகள் அலட்சியம்

குன்னூர் :நீலகிரி மாவட்டத்திற்கு கர்நாடக, கேரளா போன்ற வெளி  மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து  நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு  மாவட்டத்தின் எல்லை பகுதியில் கொரோனா பரிசோதனை

செய்யப்பட்டு வந்தது. வெளியில் இருந்து வருபவர்கள் மட்டுமின்றி. உள்ளூர் வாகனங்களில் வருவோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ்  2ம் அலை பரவி வரும் சூழலில் கொரோனா பரிசோதனையும் அதிகப்படுத்தினர். முக கவசங்கள் அணியாமல் பொது இடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் சுற்றி திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் அவற்றை சுற்றுலா பயணிகள் முறையாக பின்பற்றுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் இது குறித்து கண்டுக்கொள்வதில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.  இந்நிலையில் குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தினமும் பயணித்து வருகின்றனர். இவர்கள் முறையாக முகக்கவசங்கள் அணியாமல் இருப்பதால், கொரோனா வைரஸ் தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>