×

வேதாரண்யம் அருகே தடுப்பணை உடைந்து கடல்நீர் புகுந்தது

* 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம்

வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே தடுப்பணை உடைந்து விளைநிலங்களில் கடல்நீர் புகுந்ததால் 2ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தென்னடார் கடற்கரை பகுதியில் 2நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை தென்னடார் பட்டாணி கண்டி தடுப்பணை உடைந்தது. 250 மீட்டர் அளவுக்கு தடுப்பணை உடைந்து கடல்நீர் புகுந்ததால் தென்னடார், வாய்மேடு, பஞ்சநதிக்குளம், தகட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள 2,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்க கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகவேல் ஆலோசனையின்பேரில் உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன், பணி ஆய்வாளர் நாகராஜன், உதவி செயற்பொறியாளர் ராம்குமார் மற்றும் கிராம மக்கள் கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் மண் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காற்றின் வேகத்தால் கடல்நீர் தொடர்ந்து உட்புகுந்து வருவதால் மணல் மூட்டைகளை அடுக்கி வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Tags : Vedaranyam , Vedaranyam, Water Storage,Seawater infiltrated
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்