கொரட்டூரில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஜோசப் சாமுவேலை ஆதரித்து அவரது மனைவி பிரசாரம்

அம்பத்தூர்: அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து, அவரது மனைவி பத்மாவதி கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நேற்று வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் பொதுமக்களிடம் பேசுகையில், ‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொரட்டூர் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தப்படும். மேலும், அதனை குடிநீர் ஆதாரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கொரட்டூர் பேருந்து நிலையத்தை சீரமைத்து அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். கொரட்டூர் பகுதியில் மீன் மற்றும் காய்கறி மார்க்கெட் மற்றும் வடிகால் வசதி செய்து தரப்படும். எனவே, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்,’ என்றார்.

பிரசாரத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பி.கே.மூர்த்தி, பகுதி செயலாளர்கள் டி.எஸ்.பி.ராஜகோபால், எம்.டி.ஆர் நாகராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் தொமுச மோகன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் சாந்தகுமாரி, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பீர் முகம்மது, ரோமியோ, கராத்தே ரவி, மோகன்குமார், மாரியப்பன், முருகன், பால்சாமி, லெனின் சுந்தர், கவுரிசங்கர், இப்ராகிம், தாமோதரன், ஜஸ்டின், கார்வின், திமுக வட்ட செயலாளர்கள் எம்.இ.சேகர், பிரகாஷ், டிக்கா, சீனிவாசன், லோகநாதன், நெப்போலியன், சுந்தர்ராஜ், விஜயகுமார், சண்முகம், லால், கமல், கண்ணபிரான், நவராஜ் ரவி, ரகு, ராதாகிருஷ்ணன் மற்றும் ஆசை ராஜா உள்பட கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>