அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீட்டிப்பு இல்லை: தேடுதல் குழு தலைவராக மீண்டும் வட மாநிலத்தவர் நியமனம்

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சூரப்பா நியமிக்கப்பட்டார். அவர் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.  இந்நிலையில், அவரின் பதவிக்காலம், வரும் 11ம் தேதியுடன்  முடிவடைகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை ஆளுநர் நியமித்துள்ளார்.   இதன் மூலம், துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இப்போது அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவின் தலைவராக வடமாநிலத்தை சேர்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குழுவில், சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலாராணி சுங்கத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>