பிரசாரத்தில் வாய்க்கு வந்தபடி பேசும் விஜய பிரபாகரன்: விரக்தியில் தேமுதிக வேட்பாளர்கள்

அதிமுக கூட்டணியில் கூடுதல் சீட் கேட்டு டிமாண்ட் வைத்த தேமுதிகவுக்கு அதிமுக டாட்டா காட்டியதால் கூட்டணியில் இருந்து கழன்று கொண்டது. கிடைத்த சீட்டுடன் களத்தில் இருந்திருந்தால் அதிமுக கூட்டணியிலாவது இடம் பெற்றிருக்கும். ஆனால் பிரேமலதா,  விஜயபிரபாகரன், சுதீஷ் ஆகியோர் பேசிய பேச்சுகள் தான் கடைசியில் தேமுதிகவை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டதாக கட்சியினரே புலம்புகிறார்களாம்.  இப்போது போனால் போகிறது என அமமுக அடைக்கலம் கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுகிறார். அவரால் பிற தொகுதிகளில் பிரசாரம் செய்ய முடிவதில்லை. சுதீஷூக்கு கொரோனா பாதிப்பு என்பதால் அவரும் பிரசாரம் செய்யவில்லை. தேமுதிகவைப் பொறுத்தவரை இப்போதைய ஒற்றை பிரசார பீரங்கி சாட்சாத் விஜயபிரபாகரன் தான்.   அரசியலை பற்றி எந்த புரிதலுமே இல்லாமல் வாய்க்கு வந்தபடி அவர் பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருவதாக பேச்சு எழுந்துள்ளது. ஏன் தேமுதிகவினர் கூட அவரது பேச்சை கேட்டு, இப்படி எல்லாம் ஏன் பேசுகிறார் என்று சொல்லும் அளவுக்கு அவரது பிரச்சார பேச்சுகள் இருக்கிறதாம்.  

இனிமேல் தான் எனது ஆக்‌ஷன் இருக்கும்.. பட்டைய கிளப்ப போறேன்... விஜயகாந்த்தை பார்த்திருப்பீங்க.. பிரேமலதாவை பார்த்திருப்பீங்க.. இனிமே ரெண்டும் கலந்த விஜய பிரபாகரனை பார்க்க போறீங்க.. என்பது போன்ற திரைப்பட டயலாக்கை பயன்படுத்தி தாறுமாறாக பேசி வருகிறாராம்.  இது ஒருபுறம் இருக்க பிரச்சாரத்துக்கு செல்லும் பகுதிகளுக்கு தனது சகாக்கள் படையுடன் ஒரு டீமாக சென்று இறங்குகிறாம். அவர்களுக்கு சேர்த்து உணவு, தங்குவது, என ஒரு பெரிய லிஸ்ட்டே போட வேண்டியதிருக்காம். இதனால் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் விழிபிதுங்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக தேமுதிகவினரே குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம். இதுக்கு பேசாம பிரேமலதாவே வந்திருந்தாலே போதும் என்கிற மனநிலையில் தத்தளித்து கொண்டிருக்கிறதாம் தேமுதிக கூடாரம்.

Related Stories: