பாஜ தலைவர் வீட்டில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஜம்முவில் ராணுவம் வேட்டை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், குப்வாரா மாவட்ட பாஜ பொறுப்பாளர் அன்வர் அகமது. நவ்காம் பகுதியில் அமைந்துள்ள இவரது வீட்டின் மீது நேற்று முன்தினம் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் உயிரிழந்தார். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 4 தீவிரவாதிகள், இந்த தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரிந்தது.

அவர்களை பாதுகாப்பு படையினர் தேடினர். அதில், புல்வாமா மாவட்டத்தில் ககபோரா பகுதியில் உள்ள தோபி மொஹல்லாவில் அவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.  அப்போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கினர். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 2 பேர் லஷ்கர் இயக்கத்தையும், மற்றொருவர் அல் பாதர் இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

Related Stories:

>