×

மோடிக்கு மம்தா பதிலடி நான் ஒன்றும் பாஜ உறுப்பினர் கிடையாது

தின்ஹட்டா:மேற்கு வங்கத்தில் உள்ள உலுபெரியாவில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, ‘நந்திகிராமில் மம்தா பானர்ஜி தோல்வி அடைவது உறுதியாகி விட்டது. இதனால், கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதி ஒன்றில் அவர் போட்டியிடப் போவதாக வதந்திகள் பரவுகிறது. இது உண்மை தானா தீதி (மம்தா)?’ என்று கேட்டிருந்தார். மேலும், ‘மம்தா எங்கு போட்டியிட்டாலும் அவரை வீட்டுக்கு அனுப்ப மேற்கு வங்க மக்கள் தயாராகி விட்டனர்’ என்றும் விமர்சித்தார். கூச்பிகார் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட மம்தா, இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் பேசுகையில், ‘‘பிரதமருக்கு ஒன்று சொல்கிறேன். முதலில் உங்களுடைய உள்துறை அமைச்சரைக் கட்டுப்படுத்துங்கள். பிறகு எனக்கு நீங்கள் ஆலோசனை கூறலாம். நான் வேறு தொகுதியில் போட்டியிடப் போவது பற்றிய உங்கள் ஆலோசனையைக் கேட்க நான் ஒன்றும் பாஜ உறுப்பினர் இல்லை. நந்திகிராமில் நிச்சயம் வெல்வேன். 200க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றுவோம்,’’ என்றார் ஆவேசமாக.

Tags : Mamata ,Modi ,BJP , Mamata retaliates against Modi I baja nothing No membership
× RELATED மம்தா நலம்: மருத்துவர்கள் தகவல்