மியாமி ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு ஆஷ்லே பார்டி தகுதி

மியாமி: அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று அதிகாலை நடந்த அரையிறுதி போட்டியில், முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி (24), 6ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா(26) உடன் மோதினார். இதில் ஆதிக்கம் செலுத்திய பார்டி முதல் செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றினார்.

2வது செட்டையும் 6-3 என தன்வசப்படுத்திக்கொண்டபார்டி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். ஆடவர் ஒற்றையர் கால் இறுதியில் ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்வெல், 7-5,7-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Related Stories:

>