சிங்கபெருமாள்கோயில் ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் : திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் நேற்று காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சிங்கபெருமாள்கோயில், விஞ்சியம்பாக்கம், பாரேரி, திருத்தேரி, சத்யாநகர், வீராபுரம், பரனூர், மலையம்பாக்கம், புலிப்பாக்கம், காந்தலூர், மேலமையூர், ஒழலூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தார். மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர் பேசுகையில், ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் சிங்கபெருமாள்கோயில் ஊராட்சி, பேரூராட்சியாக தரம் உயர்த்தபடும். கிடப்பில் உள்ள சிங்கபெருமாள்கோயில்- திருக்கச்சூர் ரயில்வே மேம்பால பணி விரைந்து முடிக்கப்படும்.

வீராபுரம் மேகேந்திராசிட்டி பன்னாட்டு தொழிற்சாலைகளில் படித்த, படிக்காத உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். செங்கல்பட்டு தொகுதியில் தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பரனூர் மறுவாய்வு முகாமில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி செய்து தரப்படும். மக்களுக்கு பட்டா பெற்று தரப்படும். புலிப்பாக்கம், காந்தலூர், வடகால் பகுதியில் உள்ள கிரஷர்களால் ஏற்படும் ஒலி மாசு காற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலமையூர் ஊராட்சியில் குடிநீர் கழிவுநீர் வசதி செய்து தரப்படும். ஒழலூர் ஊராட்சியில் அனைவருக்கும் குடிநீர். வீட்டுமனை பட்டா பெற்று தரப்படும்’ என்றார்.

பிரச்சாரத்தில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆப்பூர் சந்தானம், கதிரவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்திக், செங்கல்பட்டு தொகுதி தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கே.பி.ராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.ஆர்.சி.ரத்திஷ், மகளிரணி துனை அமைப்பாளர் கலைவாணி, கிளை நிர்வாகிகள் இ.குமரன், சண்முகம், சரவணன், ஏ.குமரன், பாஸ்கர், சம்பத், துலுக்கானம், அலாவுதீன், கோவிந்தராஜ், மதனகோபால், கண்ணன், வீராபுரம் ஊராட்சி நிர்வாகிகள் ஜீவானந்தம், முனுசாமி, திருநாவுக்கரசு, கோவிந்தன், டில்லி, லோகநாதன், தனசேகர், ரீதர், புலிப்பாக்கம் ஊராட்சி செயலாளர் அசோகன், ஒழலூர் ஊராட்சி முன்னாள் தலைவரும் திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஓழலூர் ஈஸ்வரி, மேலமையூர் ஊராட்சி செயலாளர் கருணாகரன் மற்றும் விசிக தொகுதி செயலாளர் தென்னவன், காங்கிரஸ் வட்டார தலைவர் பவுல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

More
>