ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசனுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பு

ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன், தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பிலும், நடந்தும் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு, பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று ஆதம்பாக்கம் 165வது வட்ட மதச்சாற்பற்ற கூட்டணி சார்பில் ஆலந்தூர் தெற்கு பகுதி காங்கிரஸ் தலைவர் தலைவர் வி.ரமேஷ் தலைமையிலும் திமுக வட்ட செயலாளர் கே.ஆர்.ஹெகதீஸ்வரன் முன்னிலையிலும் நேற்று தா.மோ.அன்பரசனுக்கு ஏராளமானோர் வாக்கு சேகரித்தனர்.

இதில் நியூ காலனி, பாரத் நகர், சாந்தி நகர், ஏரிக்கரை தெரு, சுரேந்திரன் நகர் உள்ளிட்ட வீடுகள் மற்றும் கடைகளில் சென்று தா.மோ.அன்பரசன் நிறைவேற்றிய திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்தனர். இதில், காங்கிரஸ் சார்பாக நேரு ரோஜா, ரவிக்குமார், ஆதம் பிரகாஷ், ஐ.செல்வம், ஏழுமலை, ஜெய்கணேஷ், ரமேஷ் ஆகியோரும் திமுக சார்பாக நாகராஜசோழன், மாவட்ட பிரதிநிதி லியோ பிரபாகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: