எனக்கு வாக்களிக்கும்படி உரிமையோடு கேட்கிறேன்: மதுரவாயல் திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி பேச்சு

சென்னை: மதுரவாயல் தொகுதி திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி, மதுரவாயல் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,\”வாக்குப்பதிவிற்கு இன்னும் சில தினங்களே உள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள குடும்ப தலைவிகளுக்கு  மாதம்தோறும் ரூபாய் 1000 உரிமை தொகை, கேஸ் சிலிண்டர் மானியமாக ரூபாய் 100, பெட்ரோல் டீசல், குறைப்பது, கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம், ஆவின் பால் விட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, முதியோர் உதவித்தொகை 1500 ஆக உயர்த்தித்தப்படும்.

ஏழை, எளிய மக்களின் பசியை போக்க கலைஞர் உணவகம் அமைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை மனதில் வைத்து உங்களது பொன்னான வாக்குகளை வீணாக்காமல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றிபெற  செய்யவேண்டும் என உங்களை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்\” என்றார். கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories:

>