×

ஆம்பூர், குடியாத்தம் அருகே காட்டு யானைகள் தொடர் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

ஆம்பூர்: ஆம்பூர், குடியாத்தம் அருகே யானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். ஆம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பொன்னப்பள்ளி அருகே காட்டுப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருகிறது. இந்த யானை விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று யானை அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் விவசாய நிலத்தில் புகுந்த யானை அங்குள்ள விவசாய பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது. இந்நிலையில் நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரின் நிலத்தில் புகுந்து அங்கிருந்த வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியது.

மேலும் அங்கிருந்த மற்ற நிலங்களில் புகுந்த யானை நெற்பயிர்கள், காய்கறிகளை மிதித்து சேதப்படுத்தியது. கடந்த சில நாட்களாக பொன்னப்பள்ளி பகுதியில் ஒற்றையானை சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேபோல் குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆந்திர வனப்பகுதியில் உள்ள சரணாலயத்தில் இருந்து யானைகள் இரவு நேரத்தில் அடிக்கடி வெளியேறி குடியாத்தம் அடுத்த கதிர்குளம், கொட்டமிட்டப்பல்லி, மோர்தானா பகுதி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகளை விரட்டியடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 யானைகள் குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா, சைனகுண்டா, அனுப்பு, தேவரிஷிகுப்பம், கதிர்குளம் கிராமத்தில் விவசாய நிலங்கள் வழியாக கிராமத்திற்குள் நுழைய முயன்றது. தகவலறிந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும், யானைகளை காட்டிற்குள் விரட்டியடித்தனர்.

Tags : Ambur ,Gudiyatham , A series of wild elephants roar near Gudiyatham, Ambur: Public fear
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல்...