ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக ஜம்முவில் 62 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

திருமலை: உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களின் கோரிக்கை ஏற்று தேவஸ்தானம் சார்பில் கட்டப்படுகிறது. அதன்படி ஜம்முவில் உள்ள மஜின் பகுதியில்  வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனுமதி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைதொடர்ந்து தேவஸ்தானத்திற்கு 62 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கான நகல் நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்தது. அந்த உத்தரவில், ஜம்மு மாவட்டம் மஜின் கிராமத்தில் நிலம் ஜம்மு-காஷ்மீர் அரசு நில ஒதுக்கீட்டுச் சட்டம் 1960 ன் படி ரூ10க்கு பெயரளவிலான குத்தகையாக 40 ஆண்டுகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>