×

பெண்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்: தாம்பரம் வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா பேச்சு

சென்னை: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். பெண்கள் ரேஷன் கடைகளுக்கு செல்கின்ற சுமையை ஒழிக்கும் வகையில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும்.

குடும்ப பெண்களின் பாரத்தை குறைக்கும் வகையில் விலையில்லா வாஷிங்மிஷின் என்று ஏகப்பட்ட பெண்கள் நலத்திட்டங்கள்  நிறைவேற்றப்படும்” என்றார்.பிரசாரத்தின் போது, அதிமுக ஊராட்சி செயலாளர் வெங்கம்பாக்கம் பழனி, அகரம் ஜானகிராமன், வெங்கம்பாக்கம் ரவி, திருவஞ்சேரி ஞானகிராமன், பாஜக முத்துக்குமார், ரமேஷ் குமார், செல்வராஜ், பிரியா, எத்திராஜ், சேகர், பாமக விநாயகம், தமாகா லயன் மணி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : Tambaram ,DKM Chinnaya , Tambaram, AIADMK
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!