×

பெண்கள் சுயதொழில் தொடங்க பயிற்சி: எழும்பூர் திமுக வேட்பாளர் அறிவிப்பு

சென்னை: சென்னை எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது எழும்பூர் தொகுதிக்காக தான் நிறைவேற்ற வைத்துள்ள வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தார். அதில், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம்.

குடிநீரில் கழிவு நீர் கலக்காமல் தடுத்து தூய நீர் வழங்குதல், பெண்கள் சுயதொழில் தொடங்க பயிற்சி அளித்தல், பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்தி தருதல், வாட்ஸ் ஆப் தொலைபேசி எண் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி, உள்ளாட்சி தேர்தலை நடத்தி குறைகளை சரிசெய்தல், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மொத்தம் 12 வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தார். மக்களும் நல்லாட்சி வேண்டும் கண்டிப்பாக எங்கள் வாக்கு உங்களுக்கு தான் என்று கூறி வரவேற்கின்றனர். இதனைதொடர்ந்து இன்று மாலையும் தொகுதி மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.

Tags : Egmore ,DMK , Egmore, DMK
× RELATED உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு...