×

“தோல்வியை எதிர்கொள்ளும் போதெல்லாம் பாஜக கடைபிடிக்கும் வழிமுறை ஐடி ரெய்டுதான்” - ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவதற்கு ராகுல் கண்டனம்

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என கருத்துகணிப்பு வெளியானது. இதன் எதிரொலியாகத்தான் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. இது முழுக்க, முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் ராகுல் காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தோல்வியை எதிர்கொள்ளும் போதெல்லாம் பாஜக கடைபிடிக்கும் வழிமுறை ஐடி ரெய்டுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி (திமுக அமைப்பு செயலாளர்): கடந்த தேர்தலில் ரூ.570 கோடி கண்டெய்னர் லாரியில் பிடித்து கொடுத்தார்கள். அதுபற்றி மத்திய அரசு கண்டுபிடித்து கொடுத்ததா? அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.89 கோடி ஆர்.கே.நகர் தேர்தலின் போது பிடித்தார்கள். அதிமுக அமைச்சர்கள் கோடிக்கோடியாக பணம் சேர்த்து இருக்கிறார்கள் என்று மத்திய அரசு மற்றும் கவர்னரிடம் புகார் செய்தோம். நடவடிக்கை இல்லை. 22 வயதில் மிசாவில் தன்னந்தனியே சிறையில் சித்தரவதை அனுபவித்தவர் மு.க.ஸ்டாலின். இது எல்லாம் அவருக்கு சித்து விளையாட்டு மாதிரி. அனைத்து கருத்து கணிப்புகளும் திமுகவுக்கு சாதகமாக வந்து விட்டது. அதனால் ஏதாவது பண்ணலாம் என்று பார்க்கிறார்கள். எதை பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. ஏனென்றால் எங்கள் மடியில் கனம் இல்லை. அதனால், வழியில் பயம் இல்லை.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): அநாகரீகமான, அறுவருப்பான செயலை மத்திய அரசு செய்கிறது. 10 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருக்கின்ற ஒரு அரசாங்கம்,  பணத்தின் மூலம் தேர்தலை சந்தித்துவிடலாம் என்கிற அதிமுகவினர், இவர்கள் வீட்டில் சோதனை நடத்தாமல், ஒரு எதிர்க்கட்சி 10 ஆண்டு காலமாக அதிகாரத்தில் இல்லாத கட்சி. அதுவும் தேர்தல் நேரத்தில் அவர்களது மகளின் வீட்டில் சோதனை நடத்துவது என்பது ஜனநாயக விரோத செயல். தலைவர்கள் வீ்ட்டில் வேண்டும் என்றே செய்யப்படுவது எங்கள் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை தடுப்பதற்காக இதன் மூலம் மக்களிடையே வேறு ஏதேனும் சந்தேகங்களை உருவாக்க முடியுமா என்பதற்காக இதை செய்கிறார்கள். இதன் காரணமாக இந்த கூட்டணி மேலும் 20 இடங்களில் கூடுதலாக வெற்றி பெறும். மக்களிடையே ஆதரவு கிட்டும். மக்கள் ஆதரவு ஸ்டாலின் பக்கம் இருக்கிறது. பாஜவும், அதிமுகவும் ஒரு அறுவறுக்கதக்க செயலை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு இது வீழ்ச்சியை தரும்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): சிறுதாவூர் பங்களாவில் பிடிபட்ட ஆயிரக்கணக்கான கோடிகள்  பணம் எங்கே போனது என்றே தெரியவில்லை. தமிழகத்தில்  234 தொகுதிகளிலும் அதிமுக அணி தோற்க போவது உறுதி. இதை தெரிந்து கொணடு  தான் அக்கிரமமான செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் குறி வைத்து ரெய்டு செய்வது  அப்பட்டமான ஜனநாயக படுகொலை. இந்த  போக்கு நீடிக்க விடாமல் தடுப்பது எதிர்க்கட்சி கடமை. இந்த தேர்தல் முடிந்த  பிறகு அமைச்சர்கள் ஜெயிலுக்கு ேபாவது உறுதி. அதனால், தான் மிரட்டல்  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): இத்தனை நாட்கள் அமைதியாக இருந்து விட்டு 2 நாட்களில் தேர்தல் நடைபெறும் நிலையில் இப்போது ேசாதனை செய்வது கண்டிக்கதக்கது, பழிவாங்கும் நோக்கத்தில் செய்யக்கூடியது. திமுக மிகப்ெபரிய வெற்றி பெறும் என்று வந்திருக்கிற நிலையில் அதன் செல்வாக்ைக குறைக்க முடியும் என்று திட்டமிட்ட நோக்கத்துடன் நடைபெறும் சோதனையாகும். இதனால் மக்களை ஏமாற்றிவிட முடியாது. அதிமுக-பாஜவிற்கு ஓட்டு போட மாட்டார்கள். இது மக்களை கூடுதலாக கோபத்தை தான் உண்டு பண்ணும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது பழிவாங்கும் நடவடிக்கை என சாதாரண மக்களுக்கு கூட தெரியும்.

திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் தலைவர்): ஆளும் கட்சிகளான அதிமுகவும், பாஜவும் தேர்தல் தோல்வி பயத்தில் திமுகவை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு போதும் பணியாது என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். மக்கள் இத்தகைய போக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயம் அவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். இந்த போக்கை அவர்கள் கைவிட வேண்டும். இதை வன்மையாக கண்டிக்கிறேன். தேர்தல் ஆணையம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதை வேடிக்கை பார்க்கிறது.

வீரமணி (திராவிடர் கழக தலைவர்): ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட அதிமுக அமைச்சரின் டைரி, அதில் இருந்த குறிப்புகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இப்பொழுதும் அதிமுகவினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் குறித்து செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. வருமான வரி துறையை ஏவிவிடும் நடவடிக்கைகள் திமுக கூட்டணியின் வெற்றிக்கு உரம் போடுவதாகுமே தவிர, வெற்றியை ஒருபோதும் தடுக்காது. அதிமுக - பாஜ கூட்டணியின் தோல்வி பயத்தின் உச்சம்தான் இது என கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Rahul ,Stalin , 'IT raid is the BJP's method of dealing with defeat' - Rahul condemns Stalin's daughter's house raid
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...