×

3 தீவிரவாதிகள் சுற்றிவளைப்பு: இணைய சேவை முடக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கக்போரா என்ற இடத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடைேய நேற்றிரவு முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து காஷ்மீர் பகுதி போலீசார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘மூன்று தீவிரவாதிகள் காகபோரா பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

பாதுகாப்பு கருதி, புல்வாமாவில் இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இன்று காலை ஒரு தீவிரவாதி சிக்கியுள்ளான். தொடர்ந்து ேதடுதல் வேட்டை நடக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Terrorists, siege, internet service, freeze
× RELATED வட மாநிலங்களில் வாட்டிவரும் வெப்ப அலை: உ.பி.யில் 25 தேர்தல் பணியாளர்கள் பலி