×

நடிகை அலியா பட்டுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுடெல்லி: நடிகை அலியா பட்டுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். பாலிவுட் நடிகை அலியா பட் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பாசிடிவ் என்று பரிசோதனையில் தெரியவந்தது. அதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஹலோ! எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உடனடியாக என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன்.

உங்களது அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. தயவுசெய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். உங்களை நீங்கள் கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக பாலிவுட் நடிகர்கள் பரேஷ் ராவல், கார்த்திக் ஆரியன், ரன்பீர் கபூர் மற்றும் ரோஹித் சரப் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவெ நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், அர்ஜுன் கபூர், மலைகா அரோரா உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Aliyah Patty , Actress Alia Pattu has been confirmed to have a corona infection
× RELATED நாடாளுமன்றத்தில் அவசர நிலை பற்றி...