மத்திய வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தை புறக்கணித்தார் எல்.முருகன்..!!

திருப்பூர்: மத்திய வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தை எல்.முருகன் புறக்கணித்தார். மத்திய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க எல்.முருகனுக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர். தாராபுரம் தொப்பம்பட்டியில் விவசாயிகளுடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உயர்மின் கோபுரம், 8 வழிச்சாலை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்காமல் எல்.முருகன் புறக்கணித்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். 2 மணி வரை விவசாயிகள் காத்திருந்தும் எல்.முருகன் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories:

>