அசாமில் பா.ஜ.க. வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் பிடிபட்டது: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

பதர்கண்ட்: பாஜக காரில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது நாடு முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்தது செல்லப்பட்ட கார் பழுதானதால் வழியில் சென்ற வேறொரு காரில் லிப்ட் கேட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏற்றியதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார். இந்நிலையில் லிப்ட் கொடுத்தது பாஜக வேட்பாளரின் கார் என தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியவர தற்போது 4 அதிகாரிகள் பணிஇடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

அசாம் பதர்கண்டியில் பாஜக காரில் பிடிபட்ட வாக்குப்பதிவு இயந்திரம் சேதமடையவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜக காரில் பிடிபட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தின் அடிப்படையில் அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட வாக்கு சாவடியில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் காரில் வாக்கு இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: