×

தாதா சாகேப் பால்கே விருது: நேரம் ஒதுக்கி தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..! நடிகர் ரஜினிகாந்த் ட்விட்

சென்னை: தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார். கலைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘தாதாசாஹேப் பால்கே’ விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை நேற்று தனது ட்விட்டரில் அறிவித்தார். இதற்கு முன் இந்த விருதை கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் அமிதாப் பச்சன் பெற்றிருந்தார். தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் பாலச்சந்தருக்கு பிறகு மூன்றாவதாக நடிகர் ரஜினிகாந்த் இந்த தாதாசாஹேப் பால்கே விருதைப் பெற்றிருக்கிறார்.

இதனையடுத்து பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள், திரையுலகினர், ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை ரஜினிகாந்துக்கு தெரிவித்தனர். பின்னர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ரஜினி. இந்நிலையில் தற்போது, “புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், எனது திரைப்பட சகோதரத்துவ நண்பர்கள் மற்றும் சகாக்கள், நலம் விரும்பிகள், ஊடகங்கள், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருக்கும் எனது அன்பான ரசிகர்கள் என என்னை வாழ்த்த நேரம் ஒதுக்கிய ஒவ்வொரு நபருக்கும் மனமார்ந்த நன்றி” என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் ரஜினி.

Tags : Dada Saheb ,Rajinikanth , Dada Saheb Phalke Award: Heartfelt thanks to everyone who took the time to congratulate him ..! Actor Rajinikanth tweeted
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...