×

அடக்குமுறைக்கு திமுக அஞ்சாது: ஸ்டாலின் மகள் இல்லத்தில் வருமான வரி சோதனை நடப்பதற்கு துரைமுருகன் கண்டனம்.!!!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரி சோதனை நடப்பதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை  கணவர் சபரீசனின் சென்னை நீலாங்கரை இல்லத்தில் வசித்து வருகின்றனர். இதனிடையே, சென்னை நீலாங்கரையில் உள்ள செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகன் மகன் கார்த்திக், ஜி ஸ்கொயர் பாலா வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. திமுக மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், வருமான வரித்துறைக்கு திமுக சார்பில் கடும் கண்டம் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசின் செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது. அரசியல் நோக்கத்தோடு வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரி சோதனை போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் திமுக பயப்படாது.

இத்தகைய ரெய்டுகளுக்கு திமுக பயந்து இருந்தால் என்றைக்கோ காணாமல் போய் இருக்கும். அடக்குமுறை, சிறைத்தண்டனை போன்றவற்றுக்கு திமுக அஞ்சாது. திமுக கலகலத்துவிடும் என்று நினைப்பது அப்பாவித்தனம். இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் திமுக மேலும் வலுப்பெறும். திமுகவை மிரட்டலாம் என மத்திய அரசு நினைத்தால் அதைவிட அரசியல் அப்பாவித்தனம் வேறு ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தார்.


Tags : Duryumurugan ,Stalin , DMK fears repression: Thuraimurugan condemns income tax audit at Stalin's daughter's house
× RELATED நாளை ஏப்.14 அம்பேத்கர் பிறந்த நாளில்...