அண்ணா பல்கலை.க்கு புதிய துணைவேந்தரை நியமிக்கும் தேடல் குழு தலைவராக டெல்லி ஜவஹர்லால் பல்கலை. துணைவேந்தர் நியமனம்..! தமிழக ஆளுநர் உத்தரவு

டெல்லி: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமிக்கும் தேடல் குழுவின் தலைவராக டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் புகார் எழுந்த நிலையில் இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்தது. இதுகுறித்த விசாரணை வளையத்தில் அண்ணா பல்கலை., ஊழியர்கள், பதிவாளர் உள்ளிட்ட பலர் சிக்கினர். அத்துடன் கலையரசன் விசாரணை குழு சூரப்பா மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதாக தெரிவித்தார்.

இந்த சூழலில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் வரும் 11ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணைவேந்தரான உள்ள ஜெகதீஷ் குமாரை புதிய துணைவேந்தர் தேர்வுக்குழு தலைவராக நியமித்தார் ஆளுநர். துணைவேந்தர் பதவி காலம் ஏப்ரல் 11-இல் முடியும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேடும் பணி தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்த குழு ஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான பணிகளை துவங்க உள்ளது.

Related Stories:

>