ரெய்டுக்கு எல்லாம் பயந்து இருந்தால் என்றைக்கோ திமுக செத்து போய் புல் முளைத்திருக்கும்!: துரைமுருகன் பேட்டி..!!

வேலூர்: ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று வேலூரில் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடத்துகின்றனர். ரெய்டுக்கு எல்லாம் பயந்து இருந்தால் என்றைக்கோ திமுக செத்து போய் புல் முளைத்திருக்கும் என்றும் அவர் சாடினார். மேலும் இத்தகைய செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது ஜனநாயகமல்ல என்றும் துரைமுருகன் குறிப்பிட்டார்.

Related Stories:

>