×

ஜவாஹிருல்லா, அதிமுக வேட்பாளர் இந்திராகாந்திக்கு கொரோனா தொற்று

திருச்சி: மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா, துறையூர் அதிமுக வேட்பாளர் இந்திராகாந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திராகாந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் லேசான அறிகுறி இருந்ததை தொடர்ந்து எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாபநாசம்: மனித நேய மக்கள் கட்சி தலைவரும், திமுக கூட்டணி சார்பில் பாபநாசம் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜவாஹிருல்லா பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில் மூட்டு வலி சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனை சென்ற ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.


Tags : Javahrilla , Jawaharlal Nehru, AIADMK candidate Indira Gandhi has a corona infection
× RELATED திருப்பூரில் பெட்ரோல் பங்கில்...