×

எழும்பூர் - செங்கோட்டை இடையிலான சிறப்பு ரயில் பாதி வழித்தடங்களில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மதுரை - விருதுநகர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால்
எழும்பூர் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் பாதி வழித்தடங்களில் மட்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மதுரை - விருதுநகர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது. அதனால் அவ்வழியே செல்லும் ரயில்கள் பாதி வழியிலேயே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி எழும்பூர் - செங்கோட்டை (06181) வழித்தடத்தில் நாளை இரவு 8.25 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது, மானாமதுரை முதல் செங்கோட்டை வரை ரத்து செய்யப்படுகின்றன.

மறுமார்க்கமாக, இன்றும் வரும் 4ம் தேதியும் மாலை 4.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் செங்கோட்டை முதல் மானாமதுரை வரை ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் எழும்பூர் - குருவாயூர் (06127, 06128) வழித்தடத்தில் வரும் 4ம் தேதி காலை 8.40 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், எழும்பூர் முதல் திருநெல்வேலி வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து நாளை இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்  திருநெல்வேலி முதல் எழும்பூர் வரை ரத்துசெய்யப்படுகிறது. மேலும் எழும்பூர் - மதுரை (02613, 02614) இடையே வியாழக்கிழமை தவிர்த்து மற்ற ஆறு நாட்கள் இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயிலானது, இன்று முதல் வரும் அக்டோபர் 2ம் தேதி வரை திண்டுக்கல் ரயில்நிலையத்தில் நின்று செல்லும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Egmore ,- ,Red Fort ,Southern Railway , Egmore - Red Fort Special Train Halfway: Southern Railway Announcement
× RELATED சென்னை எழும்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!!