ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மண்ணப்ப முதலி தெரு, நைனியப்பன் தெரு, முத்தையா முதலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் மக்களிடையே பேசியதாவது: இந்த பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க லாரிகள் மற்றும் குழாய் மூலமும் குடிநீர் விநியோகித்துள்ளேன். கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுத்தேன். இந்த பகுதியில் சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், பள்ளிகளை தரம் உயர்த்துவேன். அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க செய்துள்ளேன்.

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சத்துணவு கூடங்கள், சமுதாய கூடங்கள், நியாய விலைக் கடைகள், பூங்காக்கள் உடற்பயிற்சி கூடங்கள், பள்ளிகளுக்கு குடிநீர் வசதி உள்ளிட்டவை செய்து கொடுத்துள்ளேன். குடிசை பகுதிகளே இல்லாத நிலையை உருவாக்குவேன். மக்களின் அடிப்படை பிரச்னைள் அனைத்தையும் சரி செய்து கொடுப்பேன். ஏற்கனவே சுரங்கப்பாதை, மேம்பாலம் ஆகியவை அமைத்துக் கொடுத்து உள்ளேன். உங்கள் பிரச்னையை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் கூறலாம். அதனை தீர்த்து வைப்பதே என்னுடைய முதல் வேலை. அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள பல்வேறு திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவேன். எனவே, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் வேண்டும்’ என்றார்.

Related Stories:

>