×

2020 செப்டம்பர் 7 முதல் மார்ச் 31 வரை 93.68 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம்: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயில்நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முதல் கடந்த மார்ச் 31ம் தேதி வரை 93.68 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2021 மார்ச் மாதத்தில் 28.17 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் மீண்டும் துவங்கியது. 7.9.2020 முதல் 31.3.2021 வரை 93,68,304 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 7.9.2020 முதல் 31.12.2020 வரை மொத்தம் 31,52,446 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 1.1.2021 முதல் 31.1.2021 மொத்தம் 13,43,695 பயணிகள், 1.2.2021 முதல் 28.2.2021 வரை மொத்தம் 20,54,653 பயணிகள், 1.3.2021 முதல் 31.3.2021 வரை மொத்தம் 28,17,510 பயணிகள், 8.3.2021 அன்று 1,01,163 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி கடந்த செப்டம்பர் மாதம் முதல் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 2,12,941 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும் பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 47,81,943 பயணிகள் பயணம் செய்துள்ளனர். 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 62,586 பயணிகளும், பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 13,17,093 பயணிகள் பயணம் செய்துள்ளளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச்சீட்டில் ஒரு வழிப்பயண அட்டை, இருவழிப்பயண அட்டை, பலவழி பயன்பாடு அட்டை ஆகியவற்றில் 11.9.2020 முதல் 20% கட்டண தள்ளுபடி அளித்து வருகிறது. பயண அட்டை பயணிகளுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல் 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பதற்கு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : 93.68 lakh passengers to travel on Metro train from September 7 to March 31, 2020: Management announcement
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...