×

விமான நிலைய இட பிரச்னைக்கு தீர்வு: மாதவரம் எஸ்.சுதர்சனம் உறுதி

புழல்: மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், சோழவரம் தெற்கு ஒன்றியம், புழல் ஒன்றியம், வில்லிவாக்கம் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாடியநல்லூர் பகுதி பிரசாரத்தின்போது, 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி, சுதர்சனம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மேலும், வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை, அவரது கணவர் மனோஜ் ஆகியோர் கலந்துகொண்டு திமுகவுக்கு வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் சுதர்சனம் பேசியதாவது: பம்மதுகுளம் ஈஸ்வரன் நகர், கணபதி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இந்த இடம் சென்னை விமான நிலையத்துக்கு சொந்தமானது என அளவீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

ஒன்றிய செயலாளர்கள் வே.கருணாகரன், நா.ஜெகதீசன், துரை வீரமணி, ஒன்றிய குழு தலைவர் தங்கமணி திருமால், ஒன்றியக்குழு துணை தலைவர் சாந்தி பாஸ்கரன், ஒன்றிய அவைத்தலைவர் திருமால், ஊராட்சி மன்ற தலைவர் புள்ளிலைன் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வி ரமேஷ், ஸ்டாலின், வில்லிவாக்கம் ஒன்றிய துணை செயலாளர் பாண்டேஸ்வரம் சிவா, பாண்டேஸ்வரம் ஊராட்சி செயலாளர் தண்டபாணி, பம்மதுகுளம் ராமகிருஷ்ணன், பத்மநாபன், ப.திருநாவுக்கரசு, வி.பி.அண்ணாதுரை, ஹரி கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் தேவராஜ், பொத்தூர் மாரி, வார்டு உறுப்பினர் லிங்கேஸ்வரி உள்பட ஒன்றிய நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Madhavaram ,S. Sudarsanam , Solution to the airport space problem: Madhavaram S. Sudarsanam confirmed
× RELATED காக்கி சீருடை அணிந்து வாகன சோதனை;...