சிட்லபாக்கம் ராஜேந்திரனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘பல்லாவரம் தொகுதியில் இதுவரை ரூ.250 கோடிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பல்லாவரத்தில் ரூ.83 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டு அண்மையில் திறந்து வைத்தேன். ரூ.64 கோடியில் பல்லாவரம் - ஈச்சங்காடு மேம்பாலம் கட்டப்பட்டு, ஒரு பகுதி திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. ரூ.13 கோடி செலவில் பால்கேணி குளம் உள்ளிட்ட குளங்கள் சீரமைக்கும் பணிகள், ரூ.29 கோடியில் ராதா நகர் ரயில்வே சுரங்கப்பாதை, ரூ.40 கோடியில் ஈச்சங்காடு 4 வழிச்சாலை ஆகிய பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

ரூ.211 கோடியில் பம்மல் - அனகாபுத்தூர் பாளாதள சாக்கடைத் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பல்நோக்கு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். அனைத்து ஏரிகளும் தூர்வாரி சீரமைக்கப்படும். கிருகம்பாக்கம் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட அனைத்தும் நிறைவேற்றப்படும். எனவே, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திட பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து சிட்லபாக்கம் ராஜேந்திரனை வெற்றி பெறச்செய்ய வேண்டும்,’ என்றார்.

Related Stories:

>