அறிவுசார் சொத்துரிமை சங்கதலைவர் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி திமுகவில் இணைந்தார்

சென்னை: அறிவுசார் சொத்துரிமை சங்க தலைவராக இருப்பவர் வழக்கறிஞர் சஞ்சய்காந்தி. இவர், நேற்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்பு அதிமுகவில் இருந்துவிலகி தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, தஞ்சாவூர் வீணை, கோவில்பட்டி கடலைமிட்டாய், மாமல்லபுரம் கல் சிற்பம் போன்ற 25க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தந்துள்ளேன். இந்தியாவில் புவிசார் குறியீடு அதிகம் பெற்ற மாநிலங்களில் கார்நாடகத்துக்கு அடுத்து தமிழகம் தான் முதலில் உள்ளது. தமிழ்நாடு அறிவுசார் சொத்துரிமையின் மையமாக, தமிழ்நாடு திகழும், இது திமுக ஆட்சி அமைந்தால் மட்டுமே தான் நடக்க முடியும். தமிழ் மொழியின் கலாச்சாரம் பண்பாடு அவற்றை பாதுகாக்க, தமிழக கலாச்சார பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் இதனை திமுக தான் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories: