நாட்டிலேயே முதல்முறையாக அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு: ராஜஸ்தானில் துவக்கம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ‘2021-2022ம் ஆண்டு பட்ஜெட்டில் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் சிரஞ்சீவி சுகாதார காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும்,’ என அசோக் கெலாட் அறிவித்து இருந்தார். இதன்படி, இந்த திட்டத்தில் மக்களின் பெயர்களை பதிவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு பெற முடியும். இதன் மூலமாக, பொதுமக்கள் பணமின்றி இலவசமாக சிகிச்சையை பெறலாம். இது குறித்து முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டம், நாட்டிலேயே முதல்முறையாக ராஜஸ்தானில் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து, பணமில்லா சிகிச்சையை பெற்று பயனடையுங்கள்,’ என கூறியுள்ளார்.

Related Stories:

>