‘வைட்டமின் பா, பி, சி, ஏ வீடு தேடி கரெக்டா வந்திரும்...’வைரலாகும் ராஜேந்திர பாலாஜியின் வீடியோ பேச்சு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற்ற கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: நம்ம கூட புதுப்புது கூட்டணி எல்லாம் வருது. நம்ம கூட்டணி மெகா கூட்டணி. அற்புதமான கூட்டணி. இரட்டை இலை 50 ஆயிரம் ஓட்டில் ஜெயிக்கும் என்றேன். நீங்க 60 ஆயிரம் ஓட்டில் ஜெயிக்க வைப்போம் என்கிறீர்கள். ஜெயிக்க வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. நகரத்தில் 5 கமிட்டியா இருந்தது. இப்போ 12 கமிட்டியா போட சொல்லியிருக்கேன். ஒரு ஆளுக்கு 10 பூத், (சிலரின் பெயரை தெரிவித்து) இவர்கள் பொதுவான பொறுப்பு. 12 கமிட்டி நிர்வாகிகள் தான், 10 பூத் ஓட்டை நீங்க தான் வாங்கி தர்றீங்க. அங்க ராஜா, மந்திரி, சேனாதிபதி எல்லாம் நீங்கதான். பேசி முடிவெடுத்துருவோம். கூட்டணி கட்சி தலைவர்களையும் வைத்துக் கொள்ளுங்கள், மண்டல கமிட்டியும் கண்ட்ரோல பாத்துக்குங்க.

நான் கிராமத்தில் வேலை செய்யபோறேன்.அடுத்து வைட்டமின் பா, பி, சி, ஏ எல்லாம் கரெக்ட்டா வந்திரும். நான் சொல்லி விடுறேன். நோட்டீசை ராணி மகா ராணி தான் கொடுக்க போறீங்க’’ - இப்படி பகிரங்கமாக பேசிய 45 நிமிட வீடியோ உரையாடல் பேஸ்புக், வாட்ஸ் அப் வலைத்தளங்களில் வைரலாகியது. கண்காணிக்க வேண்டிய தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? இல்லை கண்டும், காணாமல் இருப்பார்களா? தேர்தல் ஆணையத்துக்கே வெளிச்சம்.

Related Stories:

>