×

மாட்டு வண்டிகளுக்கு வந்தது மவுசு

பல தொகுதிகளில் மாட்டு வண்டியில் வலம் வந்து வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கிறாங்களாம். இதில் மாங்கனி மாவட்டத்தில் இந்த மாட்டு வண்டி பிரசாரம், கிராமப்புறங்களில் களை கட்டுதாம். இதுகுறித்து மாட்டு வண்டி உரிமையாளர்கள் கூறுகையில், ‘இந்த மாவட்டத்தில் 50 வருஷத்துக்கு முன்னாடி மாட்டு வண்டிகள்தான் போக்குவரத்துக்கு பிரதானமாக இருந்தது. அதுபோன்ற மாட்டு வண்டிகளை சில வேட்பாளர்கள் தேடி வந்து பிரசாரத்திற்கு கேட்கிறாங்க. இப்படி கேட்கிறவங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் என்ற அளவில் வாடகைக்கு விடுகிறோம். தேர்தல் களத்தில் மவுசு பிறந்து மாட்டு வண்டி சத்தம் கேட்பது மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்குது’ என்றனர்.

Tags : Mausu , Mausu came to the cow carts
× RELATED புஷ்பா வெற்றியால் மவுசு: அல்லு...