×

எனக்கு இன்னொரு முகம் இருக்கு... காட்டவா... காட்டவா... தூக்கி போட்டு மிதிச்சேன்னா... பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும்... திமுக வேட்பாளரை மிரட்டும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை

‘‘எனக்கு கர்நாடக முகம் இருக்கு காட்டவா... காட்டவா... தூக்கி போட்டு மிதிச்சேன்னா... பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும்...” என்று செந்தில் பாலாஜியை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மிரட்டும் வகையில் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த தொகுதியில்  எம்எல்ஏவாக இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர் தற்போது, கரூர் தொகுதியில் போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலை ெசந்தில் பாலாஜியை  தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியை மிரட்டும் வகையில், அரவக்குறிச்சி அருகே பூமத்தேவம் பகுதியில் நடந்த பிரசாரத்தில் அண்ணாமலை பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அண்ணாமலை பேசியதாவது:

அரசியலுக்கு வந்த பிறகு அமைதியா இருக்க வேணும்னு நினைக்கிறேன். செந்தில்பாலாஜியை எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சேன்னா, பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும். உன்ன மாதிரி எவ்வளவு பெரிய ஃபிராடுகளை எல்லாம் பார்த்துட்டு வந்திருக்கேன் நானு. நீ எல்லாம் ஒரு ஆளுன்னு.. நீ எல்லாம் ஒரு இது. உனக்கு பயந்து கை வைச்சா வயலன்ஸ் பண்ணினேன்னு மாத்திவிடுவியா?.. அண்ணாமலையை வயலன்ஸ்-ன்னு மாத்திடுவியா?. அதனால, தி.மு.க.காரனுக்கு நான் எச்சரிக்கை வெச்சிட்டு போறேன்.. அகிம்சைவாதியா அரசியல் போராட்டத்தை நடத்திட்டு இருக்கேன். ஆனா, எனக்கு இன்னொரு முகம் இருக்கு.. அது கர்நாடகா முகம்.. அதை நான் இங்கே காட்டவா.. காட்டவா...அப்படி காட்ட வேணாம்னு நினைக்கிறேன்... வீடியோ எடுப்பியா.. வந்து எடுத்துட்டு போ.. எலெக்‌ஷன் கமிஷன்ல கொடுப்பியா கொடுத்துட்டு போ... நீ என்ன செய்றியோ செய்.. இதுக்கெல்லாம் பயப்படற ஆள் நான் கிடையாது.

இவ்வாறு வீடியோவில் பேசி உள்ளார். ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி, இவ்வாறு பொது வெளியில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய வேட்பாளருமான செந்தில்பாலாஜிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுவது அரசியல் வட்டாரம், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த பேச்சு, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

Tags : Annamalai , how more ... Show me to be the face ... ... teeth killu miticcenna put off everything came out ... DMK candidate belligerent BJP candidate Annamalai (
× RELATED ஓட்டுக்கு பணம் கொடுத்தேனா: அண்ணாமலை பரபரப்பு பேட்டி