×

ரயில்வே பணிக்காக 1000 மரங்கள் அகற்ற கோரிக்கை: வனத்துறை தகவல்

பெங்களூரு: பையப்பனஹள்ளிக்கும் ஒசூருக்கும் இடையேயான பாதையை இரட்டிப்பு  ஆக்குவதற்கு எலக்ட்ரானிக்  சிட்டிக்கு அருகே உள்ள ஹீலலிகே நிலையத்தில் உள்ள 1034 மரங்களை வெட்ட ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையின் பொது அறிவிப்பில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்ட ரயில்ேவ உள்கட்டமைப்பு நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. கர்நாடக மரங்களை பாதுகாக்கும் சட்டத்தின்படி குடிமக்களிடமிருந்து பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகள் வரவேற்க்கப்படுகிறது.

ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய 10 நாட்கள் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. பிளாட்பார்ம் வேலைகளுக்கு மரம் அகற்றுதல் தேவை. தொடர்ந்து பகுதி வரைபடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வனத்துறையின் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.  48 கிமீ தூரமுள்ள பைப்பனஹள்ளி -ஓசூரு ரயில் பாதையை இரட்டிப்பாக்குவதன் மூலம், நகரத்தை பெல்லந்தூர், மாரத்தஹள்ளி மற்றும் ஐடி மையங்களுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Forest Department , For railway work Request to remove 1000 trees: Forest Department information
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...