×

பெங்களூருவில் சுட்டெரிக்கும் வெயில்: இளநீர், எலுமிச்சைக்கு மவுசு அதிகரிப்பு

இந்தியா முழுவதும் சித்திரை மாதங்களில் வெயில் வறுத்தெடுக்க தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு பங்குனி மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இதற்கு பசுமை நகரம் பெங்களூரு தப்பவில்லை. முந்தைய காலங்களில் பெங்களூருவில் அதிகப்படியாக குளிர்தான் இருக்கும். வெயிலை பார்ப்பது அபரிவிதமானது. ஆனால் மெட்ரோ மற்றும் சாலைகள் விரிவாக்கம், மேம்பாலம் அமைப்பதற்கு மரங்கள் வெட்டப்பட்டதால், அந்த நிலை மாறிவிட்டது.மரங்கள் இருந்த காலங்களில் சாலையில் சென்றால், எங்கு பார்த்தாலும் நிழல்தான் காணப்படும். ஆனால் இப்பொழுது நிழலை மக்கள் தேடி அலைய வேண்டியுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே நிழல் கொடை போன்று காட்சியளிக்கிறது.மீதமுள்ள இடங்களில் நிழலை பார்க்க முடியாது. மரங்கள் அதிகமாக இருந்தபோது குளிரும் அதிகமாக இருந்தது. தற்போது ஒரு சில மாதங்கள் மட்டும்தான் குளிர் நீடிக்கிறது. தற்போது பிற மாநிலங்களில், பிற மாவட்டங்களில் உள்ளதுபோன்று, பெங்களூருவிலும் வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது.

வியர்வை வருவதற்கு காத்திருக்கவேண்டியிருந்த பெங்களூருவில், தற்போது வியர்வை கொட்ட தொடங்கிவிட்டது. அதே நேரம் தண்ணீர் தாகமும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. எவ்வளவு முறை தண்ணீரை குடித்தாலும், தாகத்தை தீர்க்க முடியவில்லை. வேலை நிமித்தமாக வெளியில் சுற்றுபவர்கள், எவ்வளவு பாட்டீல்தான் தண்ணீரை எடுத்து செல்ல முடியும். மேலும் குடும்பத்துடன் வெளியே சென்றால், தண்ணீரை மீறிய தாகம் ஏற்படுகிறது.  தண்ணீர் இருக்கும் இடத்தை தேடி செல்கின்றனர்.இருப்பினும் எவ்வளவுதான் தண்ணீரை குடித்தாலும், தாகத்தை குறைக்க முடியவில்லை. இதனால் எளிதில் தாகத்தை தீர்க்கும் எலுமிச்சை ஜூஸ் மற்றும் பழச்சாறுகள், குளிர்பானங்களை தேடி மக்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர். ஏனென்றால் வெயிலால் ஏற்படும் உடல் உஷ்ணம் மற்றும் தாகத்தை தீர்ப்பதற்கு குளிர்பானங்கள் போதுமானதாக இருக்கிறது. பிற மாநிலங்களில் இவை வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தற்போது பெங்களூருவின் சூழ்நிலையும் அப்படிதான் மாறியுள்ளது. ஒவ்வொரு இடங்களில் மக்கள் வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல், குளிர்பானக்கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இயற்கை மற்றும் செயற்கை முறையில் குளிர்பானங்கள் தயாரித்து வழங்கப்படுகிறது. அவ்வாறு பார்க்கும் போது பெரும்பாலான இடங்களில் இயற்கை பழங்களால் தயாரிக்கப்படும் குளிர்பானங்களை பார்க்க முடிகிறது. சில இடங்களில் செயற்கை பொடிகளை வைத்து, குளிர்பானம் தயாரித்து கொடுக்கின்றனர். அவை சில நிமிடங்கள் மட்டுமே தாகத்தை தீர்ப்பதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் பழச்சாறுகள் அல்லது குளிர்பானங்களை தேடி செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது ஒரு வகை வியாபாரம் நுனுக்கம் என்றாலும், மக்களுக்கு தரமானது மற்றும் தாகத்தை தீர்க்கும் பழங்கள் எவை என்று தெரியவில்லை. மெட்ரோ சிட்டி, தொழில் நூட்ப பூங்கா என்பதால் ஒரளவிற்கு குளிரும், சிறிதளவு சுவையில் இருந்தால் போதுமென்று மக்கள் கிடைத்த குளிர்பானங்களை வாங்கி பருகிவிடுகின்றனர். ஆனால் அவற்றால் தாகம் தீர்க்கப்படுவது இல்லை. எமினிட்டி பவரும் கூடுவது இல்லை.

அத்தகைய பழச்சாறுகள் எவை என்பதை மக்கள் இந்த நேரத்தில் தெரிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக தாகத்தை தீர்ப்பதில் தலை சிறந்த குளிர்பானம், எலுமிச்சை ஜூஸ்தான். அதற்கு அடுத்தப்படியாக தர்பூசணி. இவற்றை வாங்கி பருகினால், உடல் உஷ்ணம், தாகம், குறையும்.மேலும் வைட்டமின் சி போன்ற சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும். இவற்றுக்கும் மேல் ஒரு இயற்கை குளிர்பானம் உள்ளது. அவை இளநீர், விவசாயியின் உற்ற நண்பன் என்று இதை கூறுவார்கள். விவசாயம் மற்றும் அதை சார்புடைய இந்த இளநீர், உடல் உஷ்ணத்தை உடனே தனித்துவிடும். மேலும் தாகத்தையும் குறைப்பது மட்டுமின்றி, நீண்ட நேரம் அந்த தாகம் தாக்குபிடிக்கவேண்டிய சூழ்நிலையையும் இந்த இளநீர் கொடுக்கும்.

இதை தெரிந்து கொண்ட மக்கள் செயல்படும்போது, தாகமிட்டுமின்றி, உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இதை கருத்தில் கொண்டே சில வியாபாரிகள் முன்கூட்டியே இளநீரை கொண்டு வந்து விற்பனை செய்ய தொடங்கிவிட்டனர். பெரும்பாலான இளநீர் தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இங்குள்ள இளநீரில் சுவை இருப்பதும் இல்லை. போதியளவு நீரும் இருப்பது இல்லை. அத்தகைய இளநீரை மக்கள் அடையாளம் கண்டு, வாங்கும்போது, கொடுக்கும் பணத்திற்கு, நிறைவாக இருக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதே நேரம் தற்போது கொரோனா நேரம் என்பதால், அனைத்திற்கு மேலாக எலுமிச்சை ஜூஸ் மிகவும் அனுகூலமானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள வைட்டமின் சி, கொரோனா வைரசை எதிர்கொள்ளும் சக்தியை கொடுப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Tags : Bangalore , Burning sun in Bangalore: Increase in season for fresh water and lemon
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...