தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கைவாக் வசதி இன்றி மாணவர்கள் அவதி

முல்பாகல்: தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கைவாக் வசதி ஏற்படுத்தாமல் இருப்பதால், தினமும் சாலையை கடக்க பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை 75ல் வரும் முல்பாகல் தாலுகா, நங்கலி சோதனைச்சாவடி அருகில் தாதிகல்லு கிராமத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளது.  இதில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களை ேசர்ந்த மணவர்கள் படித்து வருகிறார்கள். பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் இடை

விடாமல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்கி வருவதால், சாலையை கடந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

சாலையில் தொடர்ந்து வாகனங்கள் இயங்கி வருவதால், சாலையை கடக்க மாணவர்கள் 20 முதல் 30 நிமிடம் காக்க வேண்டியதுடன் ஆபத்தான நிலையில் அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க வேண்டுமானால், சாலையில் ஸ்கைவாக் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது மாணவர்கள் மட்டுமில்லாமல், பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது. மாநில அரசு அல்லது தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி கழகம் இதன் மீது கவனம் செலுத்தி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்கைவாக் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>