×

முக அடையாளம் காணும் எப்ஆர்எஸ் செயலி மூலம் 42 குற்றவாளிகள் கைது: டெல்லி போலீசார் தகவல்

புதுடெல்லி: இ-பீட் புக் அடிப்படையில், முக அடையாளம் காணும் ஸ்கேனிங் செயலியை(எப்ஆர்எஸ்) கொண்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து தற்போதுவரை 42 குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லி போலீசார் வெப் அடிப்படையிலான எப்ஆர்எஸ் என்கிற முக அடையாளம் காணும் செயலியை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் தேதி அறிமுகம் செய்தனர். இந்த செயலியில்  178 காவல் நிலையங்கள், 822 டிவிஷன்கள் மற்றும் 1,752 பீட்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.தரவுகள் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும்  மீட்டெடுப்பு செயல்முறைகளுக்கான டிஜிட்டல் தீர்வாக இந்த செயலி  பயன்படுத்தப்படுகிறது. பீட்டில் பணிபுரியும் காவல் அதிகாரி தன்னிடம் உள்ள  டிஜிட்டல் சாதனத்தில் குற்றம், குற்றவியல், ஆவணங்கள், கைரேகை, வாகன பதிவு  போன்றவற்றை சேமித்து வைக்க முடியும். டெல்லி காவல்துறையின் நிகழ்நேர  தரவுகளை இந்த அமைப்பு பெறுகிறது. எப்ஆர்எஸ் என்கிற இந்த செயலியை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது முதல் தற்போது வரை சுமார் 42 குற்றவாளிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுபற்றி டெல்லி போலீசார் கூறியுள்ளதாவது: சந்கே நபர்களை ஸ்கேன் செய்து முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் இந்த  எப்ஆர்எஸ் செயலியை வைத்திருக்கும் பீட் அதிகாரி, அதனை ரன் செய்தால் சம்மந்தப்பட்ட நபரின் முந்தைய குற்ற நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் அதில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுகளில் இருந்து காட்டிக்கொடுத்துவிடும். அந்த வகையில் இந்த எப்ஆர்எஸ் செயலியை கொண்டு இதுவரை 42 கிரிமினல்களை அடையாளம் கண்டு கைது செய்துள்ளோம். இதற்காக கடந்த மார்ச் 23ம் தேதி வரை சுமார் 18,968 எப்ஆர்எஸ் ஸ்கேனிங் செய்யப்பட்டது. கொரோனா கால கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், டெல்லி காவல்துறை வெற்றிகரமாக சவால்களை வாய்ப்புகளாக மாற்றியது மற்றும் இ-பீட் புத்தக அமைப்பின் முக்கியமான திட்டத்தை திட்டமிட்டு, உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தினர்.

இதுதவிர,  கடந்த 2021 மார்ச் 23 வரை இ-பீட் புத்தகத்தின் மூலம் திருடுபோன 7,881 வாகனங்கள் மற்றும்  காணாமல் போன 801 மொபைல் போன்கள் குறித்து தேடியதில், 11 வாகன திருடர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 16 வாகனங்கள் மீட்கப்பட்டன.இதுமட்டுமின்றி,  வாடகைக்கு குடியிருப்போர் மற்றும் வீட்டு பணியாளர்களை அடையாளம் காணும் மற்றொரு முக்கியமான செயல்முறையும் இ-புக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.



Tags : FRS ,Delhi Police , FRS for facial recognition 42 criminals arrested by processor: Delhi Police informed
× RELATED தேர்தல் பரப்புரையில் வெறுப்பு...