பணம் கொடுத்தால் அதிமுகவில் ‘சீட்’: முன்னாள் எம்பி பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக முன்னாள் எம்பி ஏ.முருகேசன் கட்சி தலைமைக்கு எழுதியுள்ள கடிதம்: 1977ம் ஆண்டு எம்ஜிஆர் என்னை சிதம்பரம் பாராளுமன்ற தனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவித்தார். அப்போது நான் 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். தற்போது அதிமுக கட்சியில் சீனியர்களுக்கு மதிப்பில்லை. 1991ல் ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. எம்பி, எம்எல்ஏ சீட்டுக்கும் பணம் வாங்கிக் கொண்டு சீட்டு கொடுக்கிறார்கள். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மதிப்பில்லை. கட்சியில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எந்தவித முக்கிய பொறுப்புகளும் கொடுப்பதில்லை. ஆகவே நானும், எனது குடும்பத்தினர், ஆதரவாளர்களும் அதிமுக கட்சியில் இருந்து மிகவும் மன வருத்தத்துடன் விலகி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்து கொள்கிறோம்.

Related Stories:

>