×

கடை மீதான கல்வீச்சு சிறு சம்பவம்தான்...வானதி சீனிவாசன் சொல்கிறார்

கோவை:  கோவை காந்திபுரம் பாஜ தேர்தல் அலுவலகத்தில் கோவை தெற்கு வேட்பாளர் வானதி சீனிவாசன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: யாகவா ராயினும் நாகாக்க என்ற திருக்குறளை உதாரணம் காட்டிய கமல்ஹாசனுக்கு, என் மீது துக்கடா அரசியல்வாதி என விமர்சனம் செய்யும்போது ஏன் ஞாபகம் வரவில்லை. மைக் வேலை செய்யாததால் கமல்ஹாசன் டார்ச்லைட்டை வீசியது, அவர் பொறுமை, பக்குவம் பெறவில்லை என தெரிகிறது. 66 வயதான தனக்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் கமல்ஹாசன் நீண்ட காலம் அரசியலில் பயிற்சி எடுக்க வேண்டும். டிவிட்டர் அரசியல்வாதி கமல்ஹாசன் நேரடியாக எத்தனை நாள் இருந்துள்ளார். களத்தில் நின்று என்ன செய்தார். கோவையில் பதற்றம் ஏற்படுத்த பாஜ முயற்சி செய்யவில்ைல. உ.பி. முதல்வர் பங்கேற்ற ஊர்வலத்தின்போது செருப்புக்கடையில் கல் வீசியது சிறு சம்பவம். அதனை ஊதி பெரிதாக்குக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Vanathi Srinivasan , Education on the shop is a small incident ... says Vanathi Srinivasan
× RELATED ராமசீனிவாசனால் வானதி டென்ஷன்: அதிமுக வேட்பாளருக்கு சாபம்