×

ஆலங்குளத்தில் புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும்: ஹரிநாடாரை ஆதரித்து ராக்கெட் ராஜா வாக்கு சேகரிப்பு

ஆலங்குளம்: ஆலங்குளம் தொகுதி பனங்காட்டுப் படை கட்சி வேட்பாளரும், ஒருங்கிணப்பாளருமான  ஹரி நாடாரை ஆதரித்து கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா கீழப்பாவூர் ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். ஆண்டிப்பட்டி, சிவத்தையாபுரம், பெத்தநாடார்பட்டி, கரும்பனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தலைக்கவசம் சின்னத்திற்கு வாக்குசேகரிக்க வந்த இருவருக்கும்  மேளத்தாளம் முழங்க பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். அப்போது கிராம மக்கள் தங்கள் பகுதியில் நிலவும் குறைகள், கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். சேதமடைந்த பள்ளிகளின் அவலம், குடிநீர் தட்டுப்பாடு, பஸ்வசதியின்மை ஆலங்குளம் பகுதியில் ஆபத்தான முறையில் செயல்படும் கல்குவாரிகள், உருக்குலைந்த சாலைகள் உள்ளிட்ட குறைகளை முன்வைத்தனர்.

 இதையடுத்து ராக்கெட் ராஜா பேசுகையில் ‘‘ஆலங்குளம் தொகுதி முழுவதும் பல்வேறு கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட செய்துதரப்படாததால் மக்கள் ெபரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இங்கு மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருக்கும் கல்குவாரி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். கோரிக்கைகள் அனைத்தையும் வென்றெடுக்க நமது வேட்பாளர் ஹரிநாடாருக்கு தலைக்கவசம் சின்னத்தில்  அமோக வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவார். பனைமரத் தொழில் வளர்ச்சிக்கு பேருதவி, விவசாயிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, பீடி சுற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி இலவச மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவார்.

புதிய ஒரு மாற்றத்தை நீங்கள் உருவாக்க வேண்டும். உங்கள் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் புதிய மாற்றத்திற்கான வழியை சுட்டிக்காட்டி தலைக்கவசம் சின்னத்திற்கு வாக்களித்து ஹரிநாடார் குரலை சட்டப்பேரவையில் ஒலிக்கச் செய்யுங்கள்’’ என்றார். பிரசாரத்தில்  இளைஞர் அணி மாநில செயலாளர் ஆனைகுடி சத்ரியன் பாபு,  ராக்கெட் ராஜா மக்கள் இயக்க மாநில அணி செயலாளர் ராஜா பாபு,  மாநில கொள்கை பரப்புச் செயலாளர்கள் லாரன்ஸ்,  விக்னேஷ் கார்த்திக்,  மகளிர் அணி மாநில பொறுப்பாளர் மெர்லின் பாக்கியராஜ்,  கொங்கு மண்டல துணை பொறுப்பாளர் செல்வி திருமேனி,  தென்காசி மாவட்டச் செயலாளர் அணி செயலாளர் சேர்ம ராஜ்,  தென்காசி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சதீஷ் குமார், தென்காசி மாவட்ட சமூக வலைதள அணி செயலாளர் கபிலன், இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன், ஆலங்குளம் நகரச்செயலாளர் அலெக்ஸ்,  ஆலங்குளம் ஒன்றிய துணை செயலாளர் ஆனந்த், தென்காசி மாவட்ட இளைஞர் அணி மாவட்டத் தலைவர் ஜோசப்.

நெல்லை மாவட்டச் செயலாளர் சேவியர்,  திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ராஜசேகர், சமூக வலைதள அணி மாநில தலைவர் ஜீவா, தென்காசி மாவட்ட சமூக  வலைதள கார்த்திகேயன், சமூக ஆர்வலர் சோனா மகேஷ், காளாத்திமடத்தை சேர்ந்த ஆனஸ்ட், குழந்தை நாடான், அஜித்,மணிகண்டன், மனோகர், அரவிந்த், முருகன், சுமன்,வேப்பங்காடு அருண்,  சதீஷ் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Harinadar , Create a new change in Alangulam: Rocket Raja vote-gathering in support of Harinadar
× RELATED பனங்காட்டுப்படை கட்சி ஹரிநாடாருக்கு 15...