×

பாபநாசம் அணையில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: திமுக வேட்பாளர் ஏஎல்எஸ்.லட்சுமணன் உறுதி

நெல்லை: விவசாய பணிகளுக்கு ஜுன் முதல்வாரம் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என  மானூர் ஒன்றிய பகுதி யில் பிரசாரத்தின்போது நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் ஏஎல்எஸ். லட்சுமணன்  வாக்குறுதி அளித்து ஓட்டுசேகரித்தார். நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் ஏஎல்எஸ் லட்சுமணன், தொகுதிக்கு உட்பட்ட இடங்களில்  சூறாவளி சுற்றுப்பயணம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி இன்று(ஏப்.1) காலை மானூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பணி கரிசல்குளம், வெள்ளாளன்குளம் உள்ளிட்ட கிராமங்களில வீடு வீடுடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து பேசியதாவது:

இந்த பகுதியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றி கொடுக்கப்படும். தடையின்றி குடிநீர் வசதி செய்து தரப்படும் விவசாய பணிகளுக்கு ஜுன் முதல்வாரம் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சி அமைந்ததும் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் உடனடியாக செயல்படுத்தப்படும். எனவே நெல்லை தொகுதி யில் போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து  பெருவாரியான வெற்றியை தேடிதர வேண்டும் என்றார்.

பிரசார நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன், அன்பழகன், கிளை செயலாளர்கள் அருணாசலம், முத்துமாரி மற்றும் நாராயணன், மாரியப்பன், இளைஞரணி மனோகர், பொதுக்குழு உறுப்பினர் சேவியர், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், மாநகர துணைச் செயலாளர் ரமேஷ், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் எல்ஐசி பேச்சிமுத்து, கல்லத்தியான், விடுதலை சிறுத்தை கரிசல் சுரேஷ், ராஜ்குமார், மூர்த்தி, நெல்லை முத்தையா, கேபிள் முருகன், கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Babanasam Dam ,ALS , In the first week of June from the Papanasam Dam Opening of water for irrigation: DMK candidate ALS Lakshmanan confirmed
× RELATED மலைப்பகுதிகளில் லேசான மழை; பாபநாசம்...